பிரதமர் மோடியின் மீது இந்திய வம்சாவளியினர் வெளிப்படுத்தும் அளவற்ற அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் வந்தே மாதரம் பாடல் பாடி வரவேற்பு அளித்தனர்.
இதனை தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன்,
இந்திய மக்கள் எங்கிருந்தாலும் செழிப்புடன் வாழ வேண்டும் என பிரதமர் மோடி எண்ணுவதன் காரணமாகவே அவர் செல்லும் இடமெல்லாம் அளவற்ற அன்பு மழை பொழியப்படுவதாக கூறியுள்ளார்.