நாகர்கோவில் அருகே உள்ள வலம்புரிவிளையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமையிலான 115 வீரர்கள் 5-வது நாளாக போராடி வருகின்றனர். திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்கிறது.
வட்டவிளை, வேதநகர், பட்டகசாலியன்விளை, பெரியவிளை உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.