தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் தை மாதம் 29ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல், நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாய் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 750 காளைகளும், 300 மாடு வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், வாடி வாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், அண்டா உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.