2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து மார்ச் மாத முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னை நீலங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் அவரை, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். அப்போது அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.