சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வாரச்சந்தையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் படம் இடம்பெற்ற டீசர்ட் உடன் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், விசாரணை நடத்த எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டார்.
விசாரணையில் தம்மம்பட்டி பஞ்சாயத்தின் 15-வது வார்டை சேர்ந்த திமுக உறுப்பினர் நடராஜ் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.