பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் - அமைச்சர் காந்தி சப்பைக்கட்டு கட்டுவதாக அண்ணாமலை விமர்சனம்!
Jul 26, 2025, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் – அமைச்சர் காந்தி சப்பைக்கட்டு கட்டுவதாக அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் அமைச்சர் காந்தி சப்பைக்கட்டு கட்டுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :  “பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை, தமிழக பாஜக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைத்தபோது. பதிலேதும் கூறாமல் ஒளிந்து கொண்ட கைத்தறித் துறை அமைச்சர்  காந்தி, இந்த ஆண்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும், நான்கைந்து பக்கங்களுக்குக் கதை எழுதியிருக்கிறார்.

இலவச வேட்டி, சேலைக்கான நூல், தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகளிடமும், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்திடமும், தேசிய அளவிலான ஒப்பந்தங்கள் மூலமும் கொள்முதல் செய்யப்பட்டு, நூல் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, தேர்வு பெற்ற நூல் லாட்டுகள் மட்டுமே கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்டி, சேலை உற்பத்திக்காக அனுப்பப்படுகிறது என்றும், இத்திட்டத்தினைக் கண்காணித்துச் செயல்படுத்த ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் காந்தி  கூறியுள்ளார்.

அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, இத்தனை தரப்பரிசோதனைகளுக்குப் பிறகு அனுப்பப்படும் நூலில் நெய்யப்பட்ட வேட்டிகளில் எப்படி சுமார் 20 லட்சம் வேட்டிகள், 65% க்கும் அதிகமான அளவு பாலியஸ்டர் கலந்திருப்பதாக நிராகரிக்கப்பட்டன? தவறு நூல் அனுப்பியதிலா அல்லது வேட்டி நெய்ததிலா, எங்கே தவறு நடைபெற்றிருக்கிறது என்பதை அமைச்சர் திரு. காந்தி தெரிவிப்பாரா? என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பொதுமக்களுக்கு கொடுத்த. 100 சதவீதம் பருத்தி இருக்க வேண்டிய வேட்டியின் வார்ப் பகுதியில், வெறும் 22 சதவிதம் மட்டுமே பருத்தி இருந்ததையும், மீதம் 78 சதவீதம் பாலியஸ்டர் இருந்ததையும், பரிசோதனை மூலம் கண்டறிந்து, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வேட்டி உட்பட அனைத்து ஆதாரங்களுடன், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் நாங்கள் புகாரளித்தோம்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் திரு. காந்தி, சாகவாசமாக ஒரு ஆண்டுக்குப் பிறகு வந்து, கடந்த ஆண்டு 100% பருத்தி இருந்தது என்று பொய் சொல்கிறார். திமுக ஆட்சி இருக்கும்வரை. அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். திமுக ஆட்சி நிரந்தரமில்லை என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இத்தனை ஆண்டுகளில், தமிழக அரசின் பொங்கல் இலவச வேட்டி, சேலைகளின் தரத்தினைப் பரிசோதனை செய்து. அவற்றில் தரக்குறைவானவற்றை நிராகரித்ததாகப் படித்திருக்கிறோமா? இத்தனை ஆண்டுகளில், இது போன்ற தரப்பரிசோதனை நடைபெறவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த ஆண்டு தமிழக பாஜக எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுக்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மூன்றாம் வாரத்தில் கைத்தறித் துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு சண்முகசுந்தரம் அவர்கள், கண்துடைப்புக்காக அல்லாமல், அதிகப்படியான மாதிரிகளை முதன்முறையாக தரப்பரிசோதனை செய்தும், தரம் குறைந்த வேட்டிகளை திருப்பி அனுப்பி. அவற்றின் எண்ணிக்கைக்கு ஈடான வேட்டிகளை மீண்டும் அனுப்பக் கோரியிருந்தார்.

பதவிக்கு வந்து ஆறே மாதத்தில், ஒரு ஐஏஎஸ் அதிகாரியைப் பணிமாற்றம் செய்வதுதான் உங்கள் வழக்கமான அதிகாரிகள் பணிமாற்றமா அமைச்சர் அவர்களே? தமிழக மக்கள் என்ன, முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

இறுதியாக, தரக்குறைவானவை என்று நிராகரிக்கப்பட்ட வேட்டிகளின் எண்ணிக்கைக்கு ஈடான எண்ணிக்கையிலான வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் அரசு கொள்முதல் கிடங்குக்கு, 10.02.2025 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். இல்லையேல், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும், கைத்தறித் துறை இயக்குநர் தனது 06.02.2025 தேதியிட்ட விரைவுக் குறிப்பாணை மூலம் தெரிவித்திருக்கிறார். அவர் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags: Handloom Minister GandhiNational Handloom Development CorporationTamil Nadu Government Cooperative Spinning Millsannamalaiminister gandhiTamil Nadu BJP State President AnnamalaiPongal free dhoti saree scheme
ShareTweetSendShare
Previous Post

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு : 4 வாரங்களில் விசாரணையை துவங்க உத்தரவு!

Next Post

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை : நிர்மலா சீதாராமன்

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies