ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமைத் தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது உரையாற்றிய அவர்,
தொழில்நுட்பங்களால் வேலையிழப்பு ஏற்படாது என்றும், வேலையின் தன்மை தான் மாறுபடும் என்றும் கூறினார். ஏ.ஜ. தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் திறனை மேம்படுத்துவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சைபர் குற்றங்கள், டீப் ஃபேக் வீடியோ ஆகியவற்றை தடுப்பதில் சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சாமானிய மக்களையும் தொழில்நுட்பங்கள் சென்று சேர்வதை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
140 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டதில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.