மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 55 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று, நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து 115 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 53 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அதிபர் பெர்னார்டோ அரேவலோ இரங்கலைத் தெரிவித்ததுடன், ஒரு நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.