மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கினார்.
இந்திய பொருளாதாரம் 6.4% ஆக உயரும் என கணித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 7 ஆண்டுகளுக்கு முன் 6ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை சதவீதம், தற்போது 3.2 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை எனக்கூறிய நிதியமைச்சர், உலகின் தலைசிறந்த 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என கூறினார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 45 சதவீத மக்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை எனக்கூறிய நிதியமைச்சர், பாஜக ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய அனைத்து இந்திய குடிமக்களின் வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது என தெரிவித்தார்.