ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் தேநீர் கடை ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை முன்னாள் சேர்மனும், திமுக பிரமுகருமான குட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நவல்பூரில் தேநீர் கடை ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மாணவ-மாணவிகளை திமுக பிரமுகர் குட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் அடிக்கவும் முற்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேநீர் கடையில் பணியாற்றும் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் புகார் மனுவை வாங்காமால் போலீசார் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக பிரமுகர் குட்டி பள்ளி மாணவ மாணவிகளை தாக்க முற்படும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.