செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற உலகளாவிய AI செயல் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கருத்துக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன்பட்டுள்ளார்.
இதுகுறித்து உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மாற்ற முடியுமா? என்பது குறித்த பிரதமர் மோடியின் கருத்தைப் பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு, மக்களை எளிதாக்கி, அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக மாற்றும் என்ற பிரதமர் மோடியின் கருத்தை உண்மையிலேயே நம்புவதாகவும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
முன்னதாக பாரிஸில் நடைபெற்ற AI அதிரடி உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷாவையும் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு அருமையான சந்திப்பு நடந்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்வேறு தலைப்புகளில் நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தியதாகவும், அவர்களின் மகன் விவேக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.