தைப்பூசத்தை ஒட்டி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
தைப்பூசத்தை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்றார்.
தொடர்ந்து அங்குள்ள பழனி ஆண்டவர் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் நின்று சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, அன்னதானம் பந்தலில் அமர்ந்து உணவருந்தினார்.