தமிழக வெற்றிக் கழகத்தில் “திருநர் அணி” தொடங்கியுள்ள விஜய், அதை 9வது இடத்தில் பட்டியலிட வேண்டிய அவசியம் என்ன? என திருநர் இயக்க செயற்பாட்டாளர் வித்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெகவில் உள்ள அணிகள் குறித்த பட்டியலை தமிழ் ஜனம் தொலைக்காட்சி பிரத்யேகமாக வெளியிட்டது. அந்த பட்டியலில் திருநர் அணி 9வது இடத்தில் இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திருநர் இயக்க செயற்பாட்டாளர் வித்யா, விஜய் திருநர் அணி தொடங்கியுருப்பது நல்ல விஷயம் தான் எனவும், ஆனால் அதை 9வது இடத்தில் பட்டியலிட வேண்டிய அவசியமென்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதுபோன்ற டார்க் காமெடிகளை உங்களின் திரைப்படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என விஜய்க்கு திருநர் இயக்க செயற்பாட்டாளர் வித்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.