திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தைப்பூசத்தை ஒட்டி திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும்பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் பாதயாத்திரை பக்தர்கள் விரைவாக சென்று தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டது.
இதேபோல் பழனி முருகன் கோயிலிலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விரைந்து தரிசனம் செய்யும் வகையில் தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும் என நடைபயண பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.