கொடைக்கானலில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உறைபனி காணப்படுவதால் பச்சை புல்வெளிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி காணப்படுவது வழக்கம். நடப்பாண்டு பிப்ரவரி மாதத்திலும் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைவாகவே உள்ளது.
கொடைக்கானலில் நிலவும் உறைபனி காரணமாக பச்சை புல்வெளிகள் வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.