ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். உணவு சமைப்பதற்காக ஹோட்டல் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.