தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் கொட்டப்பட்ட குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
திருச்சி மாநகராட்சியின் 21வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பள்ளிவாசல் பின்புறம் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்படும் நிலையில், அவற்றை மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை என புகார் எழுந்தது.
மேலும், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த குப்பைகளை அகற்றினர்.