சுனிதா வில்லயம்சை மார்ச் 12ம் தேதி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை நாசா மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், மீண்டும் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்பு தேர்வான பின் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் வேகமெடுத்த நிலையில், தற்போது அவரை மீட்க புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, க்ரூ-10 என்ற புதிய ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப நாசா மற்றும் SPACE-X திட்டமிட்டுள்ள நிலையில், மார்ச் 12ம் தேதி அந்த புதிய ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.