மூன்று சக்கர வாகனம் மற்றும் பேட்டரி நாற்காலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள மாற்றித்திறனாளிகள் ஆணையரகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் பேட்டரி நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. இதில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்துள்ள மாற்றுத்திறனாளிகள், வாகனங்களையும், நாற்காலிகளையும் அதிகாரிகள் விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேலும் இதை கண்டித்து மாற்றித்திறனாளிகள் ஆணையரகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.