மத்திய அரசின் மலிவு விலை மருந்தக திட்டத்தை காப்பி அடித்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்கள் குறித்து திமுக அரசு கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை என தெரிவத்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கவில்லை என நடிகர் கஞ்சா கருப்பு கூட போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும், மத்திய அரசின் திட்டத்தை காப்பி அடித்து முதல்வர் மருந்தகம் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார்.