உதகையில் ரசாயனம் கலக்கப்பட்ட கேரட்களை ஏற்றிச்சென்ற லாரியை விவசாயிகள் சங்கத்தினர் சிறை பிடித்தனர்.
கொல்லிமலை பகுதியில் கேரட் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், தரக்குறைவான கேரட்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அங்கு திரண்ட விவசாய சங்கத்தினர், ரசாயன கேரட்களை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.