இந்திய சுதந்திர இயக்கத்தின் தூண்களில் சரோஜினி நாயுடு ஒருவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பதவில், இந்திய சுதந்திர இயக்கத்தின் தூண்களில் ஒருவரான அவரின் பெண் விடுதலைக்கான அவரது செயல்பாடு, பல பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவும், சமத்துவமான சமூகத்திற்கான அணுகலுக்காகவும் போராட வழிவகுத்துள்ளததாக தெரிவித்துள்ளார்.
அதனால்தான் இன்று தேசிய மகளிர் தினமாகவும் கொண்டாடுகிறோம். இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு, ஒரு கவிஞராக தனது கலைத்திறனுக்காகவும், அரசியல் ஆர்வலராக தனது தீவிர ஈடுபாட்டிற்காகவும் தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்படுகிறார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.