சமூகத்தை ஒன்றிணைப்பதில் வானொலி முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாக வானொலியைக் கொண்டாட உலக வானொலி தினம் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும் என கூறியுள்ளார்.
தகவல் பரவலை எளிதாக்குதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் வானொலி ஒலிபரப்பாளர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தகவல்களை அணுகுவதை ஊக்குவித்தல் மற்றும் வலையமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் வானொலியின் பங்கை இந்த நாள் நமக்கு நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ‘வானொலி மற்றும் காலநிலை மாற்றம்’ என்ற கருப்பொருளுடன், காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகளைத் திரட்டுவதிலும், வரவிருக்கும் தலைமுறையினருக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி அணிவகுப்பதிலும் வானொலியின் பங்கு முக்கியத்துவம் பெறுவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.