போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான் சிறப்பாக செயல்படுவதாக, டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கும் போட்டி கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,
இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான் போதை பொருள் ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், அனைத்து கல்லூரிகளிலும் ANTI DRUG CLUB ஆரம்பித்துள்ளதாகக் கூறிய சங்கர் ஜிவால், இந்த நடவடிக்கை மூலம் போதைப் பொருளை தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.