அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கப்பார்டு பதவியேற்றார்.
ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்டுக்கு, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் கோண்டி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதியில் இருந்து, அரசின் முக்கிய பொறுப்புகளில் முக்கியமானவர்களை டிரம்ப் அடுத்தடுத்து நியமித்து வரும் நிலையில், 14-வது நபர் கப்பார்டு ஆவார்.