அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி கைலாசப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என அமித்ஷா கூறியதாகவும், அதை இபிஎஸ் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். அமித்ஷா கூறியதை ஏற்காததன் விளைவாகவே அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளதாகவும் அவர் சாடினார்.
அதிமுக ஒன்றாக இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்திருப்போம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.