அமெரிக்க பொருட்களுக்கு எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதற்கு நிகராக அமெரிக்காவும் இறக்குமதி வரியை விதிக்கும் வகையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
சட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிற்கு நட்பு நாடுகளே எதிராக இருப்பதாக கூறினார். இந்தியாவில் வணிகம் செய்ய எலான் மஸ்க் விரும்புகிறார் எனவும் ஆனால் இந்தியா அதிக வரி விதிப்பதாகவும் கூறினார்.
மேலும், எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன எனவும் டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.