கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மின்கம்பம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கனரக லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திக்கணக்கோட் சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கனரக லாரி, கருக்குபனை பகுதியில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்தது. இருப்பினும் லாரியை நிறுத்தாத ஓட்டுநர், அதே வேகத்துடன் தப்பிச்செல்ல முயன்றார்.
இதைக் கண்ட பொதுமக்கள், 8 கிலோ மீட்டர் தூரம் லாரியை துரத்திச் சென்று ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லாரி மின்கம்பம் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.