பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் தனது குடும்பத்துடன் சந்தித்தார்.
அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி சந்தித்தார்.
பின்னர் பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் தனது குடும்பத்துடன் சந்தித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
எலான் மஸ்க் உடனான சந்திப்பின்போது விண்வெளி, தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார்.