மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களில் சிலர் வீடுகளை காலி செய்த வீடியா காட்சிகள் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்திலும், நெல்லை நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களில் சிலர் விரக்தியில் வீட்டை காலி செய்து வெளியேறியுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.