மோடி அரசின் கீழ் இந்திய சாலைகள் அமெரிக்காவையே விஞ்சிவிட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் முன்ஷி புலியா மற்றும் குர்ராம் நகர் மேம்பாலத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், அடுத்த 2 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு அமெரிக்காவை விட சிறந்ததாக இருக்கும் என வாக்குறுதி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கான இயந்திரமாக உத்தரப்பிரதேசம் மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.