பெண்கள் பெரியளவிலான கனவுகளை காண வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
அனைத்து பெண்களும் தைரியத்தோடு பெரிய கனவுகளை காண வேண்டும் என தெரிவித்தார். மேலும், அந்த கனவுகளை அடைய அனைத்து வகையிலான வலிமையையும் வெளிக்கொணர வேண்டும் எனவும் கூறினார்.