இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
13 மீனவர்களை விடுதலை செய்ய உதவிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி கூறியுள்ளார்.
மற்ற 4 மீனவர்களையும் வரும் 21-ம் தேதி வரை சிறையில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், விரைவில் 4 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.