பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்புவோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்த ஸ்டாலின், 4 ஆண்டுகள் ஆகியும் ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாத கெஜ்ரிவாலை மக்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், அதேபோல் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வராத அதிமுகவும் ஆட்சியை இழந்தது எனவும் அவர் தெரிவித்தார்.