டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் துடிப்பான ஜவுளி பாரம்பரியத்தையும் புதுமையையும் வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இது ஜவுளித் துறையை இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் 5F தொலைநோக்குப் பார்வை, “பண்ணை முதல் நார் வரை தொழிற்சாலை முதல் ஃபேஷன் வரை வெளிநாட்டு சந்தைகள்”, இந்தியாவின் ஜவுளித் துறையின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாரத் டெக்ஸ் 2025 போன்ற நிகழ்வுகள் இந்த இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு ஒரு சான்று என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.