தமிழகத்தில் சாதி வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்கள் முதல்வர் அவர்களே? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்
. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது என்றும், இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது முதல்வர் ஒப்புகொள்வரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும். ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA. MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் , சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என்றும் ரஞ்சித் கூறியுள்ளார்.