பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விசிகவினருடன் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.