மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை என அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்தே, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்க தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்ற 3-ஆம் பாலினத்தவர்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்ட டிரம்ப் பாதுகாப்புப் படைகளில் இருந்து அவர்களை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இதனையடுத்து அந்த உத்தரவு அமலாகியுள்ளது.