மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி காவல்துறையை கண்டித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க கோரியும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது விசிக நிர்வாகிகள் சிலர், மயிலாடுதுறையில் பாமக கூட வெற்றி பெறலாம் என்றும், ஆனால் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் எனவும் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.