சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
நாடு முழுவதும் 7 ஆயிரத்து 842 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 24 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 17 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதன் முதல் நாளான இன்று 10ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில தேர்வு எழுதினர். அதேபோல் 12ம் வகுப்பு மாணவர்கள் தொழில்முனைவு தேர்வு எழுதினர்.
சிபிஎஸ்இ தேர்வை ஒட்டி தேர்வு மையங்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் அறை கண்காணிப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.