தூத்துக்குடியில் உள்ள பிரதான மழைநீர் கால்வாயான பக்கிள் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7.5 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த கால்வாயானது மாநகரின் பிரதான மழை நீர் வடிகாலாக உள்ளது. இந்நிலையில் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் மழைநீல் வெளியேற சிக்கல் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கால்வாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.