உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் பிரத்யேக வாகனங்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு புனித நீராடியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கும்பமேளா நிகழ்ச்சியை முடித்துவிட்டு அயோத்தியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர்.
இதனால் அங்குள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் தெருக்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு சுவாசக் கோளாறு தொடர்புடைய நோய்கள் ஏற்படும் என்பதால், காற்று மாசைக் குறைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படியே தற்போது பிரத்யேக வாகனங்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.