விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி தன்னை கௌரவித்துள்ளதாக குறிப்பிட்டர். பத்மவிபூஷன் விருது பெறும்போது தந்தை தன்னுடன் இல்லை என்றும், சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூத்து நடைபெறும் இடங்களில் எல்லாம் பிரதமருக்கு கூத்து வடிவிலேயே நன்றி தெரிவிக்க உள்ளதாக பத்மஸ்ரீ விருது பெற உள்ள தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூத்து கலையை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளதாக தெரிவித்தார்.”பத்மஸ்ரீ விருதை மூத்தோர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.