காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து புறப்பட்ட 76 பேர் கொண்ட குழுவினருக்கு உறவினர்களும், பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
காசி நகரில் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியின் சிந்தனையை செயலாக்கும் வகையிலும், தேச ஒற்றுமையில் மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் மத்திய அரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
3வது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் செலவில் காசிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடப்பாண்டில், சேலத்தில் இருந்து 76 பேர் காசிக்கு பயணத்தை தொடங்கினர். சேலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டவர்களுக்கு உறவினர்கள் மற்றும் பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.