ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமர் மோடியின் முழக்கத்திற்கு ஏற்ப காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே இருக்கக்கூடிய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு மூன்றாவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்று வருவதாக வாரணாசி மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும், பிரதமரின் தொகுதியான வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்தும் அவருடன் நமது செய்தியாளர் விக்னேஷ் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது காசி தமிழ் சங்கமத்திற்கு வருவோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கும்பமேளாவுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமரின் தொகுதியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் முழக்கத்திற்கு ஏற்ப காசி தமிழ் சங்கமம் சிறப்பாக நடைபெறுவதாகவும் ராஜலிங்கம் தெரிவித்தார்.