காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
காரைக்கால் மீனவர்கள் மீது கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை கண்டித்து கடந்த 7 நாட்களாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கக்கோரியும், படகு உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட வாகனத்தில் மீனவர்கள் பேரணி சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.