சேலத்தில் ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி சரஸ்வதிக்கு 100-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாநகரத்தில் உள்ள அருணாச்சல ஆசாரி தெருவில் வசித்து வருபவர் மூதாட்டி சரஸ்வதி. இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி பேரன், பேத்திகளுடன் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூதாட்டி சரஸ்வதியின் 100-வது பிறந்தநாளை வெகு விமிரிசையாக கொண்டாட குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி மூதாட்டி சரஸ்வதி 100-வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த விழாவில் மூதாட்டியின் மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள், கொள்ளு பேரன் பேத்திகள் என 60-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாட்டிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.