புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யா உட்படி 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் 3 வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது ரவுடி சத்யா கும்பல் என்பது தெரிய வர தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி சத்யாவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்ததில் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி விக்கிக்கும், சத்யாவுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
யார் யாரை முதலில் தீர்த்துக்கட்டுவது என இவர்கள் போட்டி போட்டு கொண்டிருக்க விக்கி ரஸி, தேவா, ஆதி ஆகிய மூவரை ரவுடி சத்யா கும்பல் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேரை கைது செய்த காவல்துறை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.