சைவ, வைணவ கோயில்களில் பலியிடும் வழக்கம் இல்லை என்றும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளை யாரும் அவமதிக்க கூடாது எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைவ, வைணவ கோயில்களில் பலியிடும் வழக்கம் இல்லை என எல்.முருகன் தெரிவித்தார்.
இந்துக்களின் வழிபாட்டு முறைகளை யாரும் அவமதிக்க கூடாது என்றும் தேசிய கல்விக்கொள்கை ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது இல்லை என தெரிவித்தார்.
புதிய கல்விக்கொள்கையில் தாய் மொழிக்கே முக்கியத்துவம் என்றும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என எல்.முருகன் தெரிவித்தார்.
உலகளவில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி என்றும் மத்திய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளன என்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என தெரிவித்தார்.
முன்னாதாக கீழவளவு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக
ஆன்மீக ஆலயப் பிரிவின் மாவட்டத் தலைவருமான திரு.P.V.தர்மலிங்கம் ஜி அவர்களது இல்ல விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் .கதளி நரசிங்கப் பெருமாள் இல்லத்திற்கு சென்ற எல்.முருகன், கதளி நரசிங்கப் பெருமா தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.