சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் மறுப்பது நவீன தீண்டாமை என திமுக அரசை மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு செய்வது நவீன தீண்டாமை என தெரிவித்தார்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் வேறு மொழி அல்லது ஹிந்தியை பயிற்றுவிக்க மாட்டோம் எனக்கூறி பள்ளியை மூடத் தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஏழை எளிய மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்படுவது நவீன தீண்டாமையின் மறு உருவம் என்றும் அவர் விமர்சித்தார்.
மக்களை ஏமாற்றும் செயலை திமுக செய்து கொண்டிருப்பதாகவும் எல்.முருகன் கூறினார்.